இந்திய குடியரசு கட்சியின் நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் நகர நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது
இந்திய குடியரசு கட்சியின் நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் நகர நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது
பண்ருட்டி: பிப்,23
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இந்திய குடியரசு கட்சியின் நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் நகர நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நகர தலைவர் பிரகாஷ்  தலைமையில் நடைப்பெற்றது. வருகை புரிந்த அனைவரையும் நகர செயலாளர் அஜித்குமார் வரவேற்றார். நகர பொருளாளர் உதயசூரியன்  முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பாலவீரவேல் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். 

இதில் மாவட்ட செயலாளர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் சதிஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல்வநாதன், பண்ருட்டி ஒன்றிய தலைவர் ஜான்(எ)கலைவேந்தன், நகர துணை செயலாளர் சிவசங்கர், நகர இளைஞரணி செயலாளர் மதியழகன், நகர இளைஞரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர துணை து.தலைவர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1).தீர்மானம்.
வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர்  மாண்புமிகு எடப்பாடியார் ஈ.பி.எஸ். தலைமையில் கூட்டணி தொடர வேண்டு மென தமிழ்நாடு தலைவர்  எழுச்சி தலைவர் டாக்டர். செ.கு.தமிழரசன் Ex.MLA.அவர்களிடம் இச்செயற்குழு வலியுறுத்துவது.

2) தீர்மானம்.
பண்ருட்டி நகரத்தில் உள்ள ஆதிதிராவிட பகுதிக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டு மென நகராட்சி நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3) தீர்மானம்.
அம்பேத்கர் நகர் வழியாக ரயில்நிலையம் தனியார் ஐடிஐ மற்றும் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டு மென மாவட்ட நிர்வாகாத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4) தீர்மானம்.
பண்ருட்டி நகரத்தில் அரசு தொழிற்கல்வி(ஐடிஐ) தொடங்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

5) தீர்மானம்.
பண்ருட்டிலிருந்து சென்னை சாலையில் பாலத்தின் கீழே ரயில்வே கேட் அருகில் உள்ள சட்ட மாமேதை  பி.ஆர்.அம்பேத்கார் திருஉருவ சிலைக்கு போடப்பட்ட இரும்பு கூட்டை அகற்ற வேண்டுமெனவும் மேலும் அதன் அருகேயுள்ள மற்றோரு சிலையானது சிறுநீர் கழிக்கும் இடத்தில் உள்ளதை எடுத்து பேருந்தின் முகப்பு வாயில் வைக்க வேண்டு மென மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6) தீர்மானம்.
சேலத்தில் நடை பெறுகின்ற பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் அண்ணல் அம்பேத்கார் அருந்தொண்டர் விருது வழங்க வருகை புரியும் இந்திய குடியரசு கட்சி தமிழ்நாடு தலைவர் டாக்டர். செ.கு.தமிழரசன்.Ex.MLA. அவர்களை கௌரவிக்க நகரத்திலிருந்து மூன்று வேன்களோடு செல்வதென  முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Popular posts
தமிழக அரசால் செயல்பட்டு கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும், தாலுகா அளவில், மாவட்ட அளவில் உள்ள பத்திரிக்கையாளர்களை நல வாரியத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Image
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு: வரலாறு படைத்த முதல் ஏற்றுமதிப் பொருட்கள்
Image
ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல் -பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது
Image